இன்றைய தமிழகம்

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை

தென்காசி:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குற்றால சீசன் துவங் குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து பணிகளும் முடிவுற்று தயார் நிலை தயார் நிலையில் இருக்க வேண்டும். குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்கு உடைமாற்றும் அறை, குடிநீர், கழிப்பறை, சாலை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். அருவிப்பகுதியில் குப்பைகள் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு வணிக கடைகளிலிருந்து வரும் கழிவுகளை சிற்றாற்றில் கலக்காத வண்ணம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அருவியை சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மின்விளக்குகள் அமைத்திட வேண்டும்.

குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இலை போன்ற பொருட்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒருங் கிணைந்து வணிக நிறுவனங்களில் பிளாஸ் டிக் பொருட்கள் பயன் பாட்டினை அகற் றுவதற் கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், சாலைகள் அதற்குரிய வழித்தடங்களை சீரமைத்திட வேண்டும். அருவிப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.சங்கர், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.புஷ்பராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், தென்காசி வட்டாட்சியர் மணிகண்டன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ந.நித்திய கல்யாணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குற்றால சீசன் துவங் குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து பணிகளும் முடிவுற்று தயார் நிலை தயார் நிலையில் இருக்க வேண்டும். குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்கு உடைமாற்றும் […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15