
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேரூராட்சியில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தத்தோபந்த்தெங்காடிதேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் சார்பாக மத்திய மாநில அரசின் தொழிலாளர் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சியும் அதனோடு சேர்ந்து பல்வேறு திட்டங்களில் குறிப்பாக விபத்து காப்பீடு மருத்துவ காப்பீடு பென்ஷன் திட்டம் தொழிலாளர் நல வாரியத் திட்டம் மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டம் மத்திய அரசின் பல்வேறு தொழிலாளர் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு இலவசமாக பதிவு நடத்தப்பட்டது இந்த பதிவு முகாமிற்கு தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தில்மதுரை மண்டல இயக்குனர் டாக்டர் பிரபாகரன் தலைமை வகித்து திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர்லால் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துக் கூறினர்.சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி செயல் அலுவலர் சத்யதாஸ் பேரூராட்சி மன்ற தலைவர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து மக்கள் பயன்படுத்த ஆலோசனைகளை வழங்கி பேசினார் மேலும் இந்த முகாமில் 10 வது வார்டு கவுன்சிலர் எப்சி ராணி 1 வது வார்டு கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு திட்டங்களில் பதிவு செய்து கொண்டனர்முடிவில் தொழிலாளர் நண்பர் ஷைலா அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஏற்கனவே இது போன்ற பயிற்சி முகாம் நடைபெற்ற போதிலும் பேரூராட்சியில் முதன்முறையாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேரூராட்சியில் தான் முதன் முதலாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.