தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் இன்று விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐ.யு.எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று முதல் அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து நேற்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறி வித்திருந்தார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோ சித்து அறிவிப்பு வெளி யிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு இன்று காலை முதல் அமைச்சர் விஜய் தலைமை யிலான அமைச்சரவையில் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. திருமாவளவன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழக அமைச் சரவையில் இடம்பெற உள்ள ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மை யினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் […]

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 2 3 4 5 11