த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

சென்னை:
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங் கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க. வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யை சேர்ந்தவர்கள் இடம் பெறவில்லை.

தற்போது, அ.தி.மு.க. 2 ஆக உடைந்து நிற்கி றது. மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேரும், சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேரும் உள்ளனர். சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க த.வெ.க. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால், அதில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

அ தி மு க அமைச்சரவையில் ஏன் இடம் பெறவில்லை என்றால் தகுதி நீக்கம் தொடர்பான அச்சம். அதாவது, சி.வி. சண்முகம் .பி. வேலுமணி எஸ்.பி. உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமிதான் அவர் களின் ‘பி பார்ம்’ல், அதாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேவையான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ண மூர்த்தியை அவர் நியமித்துள்ளார். அவர் த.வெ.க. நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் அனுப்பினார். அதனை சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்க வில்லை. த.வெ.க.வுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறினால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய
முடியும். அந்த வகையில், 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சா மிக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட நேரிடும்அசா தாரண சூழ்நிலையில், அதில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவியை முதல் அமைச்சர் விஜய் வழங்கினால், நீதி மன்றமும் அவரது செயலை கண்டிக்க வாய்ப்பு இருக்கிறது.

அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’ என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், அ.தி.முக.வினரை அமை ச்சரவையில் சேர்ப்பதற்கு மறைமுகமாக எதிர் ப்பு தெரிவித்தது. இத னால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, பிற கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் விஜய் கருதினார். மேற்கண்ட 2 காரணங்களாலேயே, த.வெ.க. அமைச்சரவை யில் அ.தி.மு.க.வினருக்கு இடம் வழங்கப்படவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங் கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க. […]

Recent News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

1 7 8 9 10 11