இன்றைய தமிழகம்

நான் அரசியல விட்டு போறேன்… அமைச்சர் பதவிய விட்டு போக நீங்க தயாரா? நயினார்-செங்கோட்டையன் நேரடி மோதல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக…

நான் அரசியல விட்டு போறேன்… அமைச்சர் பதவிய விட்டு போக நீங்க தயாரா? நயினார்-செங்கோட்டையன் நேரடி மோதல்

 நான் அரசியலை விட்டு போறேன்… நீங்க அமைச்சர் பதவியை விட்டு போக தயாரா? என ரகசியங்களை வெளியிட்டு பாஜ மாநில தலைவர் நயினார்-அமைச்சர் செங்கோட்டையன் நேரடி மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 23ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆளுநர் என்பவர் மேனேஜர் தான். கவர்னரே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஆட்சியமைத்த பிறகு கவர்னரே தேவையில்லை என வெட்டி வீராப்பு காட்டும் நீங்கள், தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் எத்தனை முறை கவர்னர் மாளிகைக்கு சென்றீர்கள்?. ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள் என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? எனவே, இனியும் இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை செய்யாதீர்கள் அமைச்சரே’’ என்று கூறியிருந்தார்.

அரசியல் பார்வை

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘‘நயினார் நாகேந்திரன் காமெடியாக பேசுகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பம் செய்திருந்தார். நாங்கள் ஆட்சிக்கு உதவுங்கள் என்று என்றைக்குமே பாஜவிடம் ஆதரவு கேட்டது கிடையாது’’ என்று காட்டமாக கூறினார். இதற்கு சென்னையில் பதில் அளித்து நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘என்னை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அவரை பற்றி எனக்கு ரொம்ப ரொம்ப நன்றாகவே தெரியும்.

செங்கோட்டையன் அடக்கி வாசித்தால் ரொம்ப நல்லது. நான் அவரை பற்றி சொல்லவே இல்ல.. நான் யார் யாரிடம் பேசினாங்கன்னு தெரியும்னு சொன்னேன். சம்பந்தமில்லாம் எப்போதுமே செங்கோட்டையன் ஆஜராகுவார். இப்போ இல்ல… ஜெயலலிதா காலத்தில் இருந்தே அப்படிதான். சம்பந்தம் சம்பந்தமில்லாமலே ஆஜராகுவார். மாட்டி விடுவார். அவர் இப்போ சொல்றாரு… நயினார் நாகேந்திரன் மருத்துவ கல்லூரிக்கு திமுக ஆட்சியில் விண்ணப்பித்திருந்தார், சமரசம் பேசி கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்.

நான் பணிவோடு சொல்கிறேன், நான் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தால் அல்லது வேறு ஏதுவும் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தால் நான் அரசியலை விட்டே விலக தயார். செங்கோட்டையன் அமைச்சர் பதவி மட்டும் விலக தயாரா?’’ என்று ஆவேசமாக பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோபி மற்றும் நம்பியூரில் 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நயினார் நாகேந்திரன் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டது எல்லோருக்கும் தெரியும். அது நாடறிந்த உண்மை. அவர் மறைத்தாலும் மறைக்க முடியாது. அதற்கு பிறகு அவர் வேண்டாம் என்று முடிவு செய்தது வேறு. அவர் அளித்த விண்ணப்பம் இருக்கிறது. அதைத்தான் நான் கூறினேன். என்னை அடக்கி வாசிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அடக்கித் தான் வாசித்துக் கொண்டிருக்கின்றோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு எங்களை விமர்சனம் செய்கிறார். அதுதான் வேதனையாக உள்ளது.

எங்களை விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. ஆகவே தான் அப்படி சொன்னோம். எப்போதும் நயினார் நாகேந்திரனுக்கு எங்களை தாக்குவது தான் வேலையாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வாக்கு 11 சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக குறைந்திருக்கிறது. அதற்கு யார் காரணம், யார் பொறுப்பு என்பதை அவர் விளக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அவா.

இவ்வாறு அவர் கூறினார். தங்க மோதிர திட்டம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தொடர்பாக கேள்வி கேட்ட போது, ‘‘மற்றவர்களின் கருத்துக்கள் வேறு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளோம். அதற்கும் அவர்கள் சொல்வதற்கும் பொருத்தமாக இருக்காது’’ என்றார்.

 நான் அரசியலை விட்டு போறேன்… நீங்க அமைச்சர் பதவியை விட்டு போக தயாரா? என ரகசியங்களை வெளியிட்டு பாஜ மாநில தலைவர் நயினார்-அமைச்சர் செங்கோட்டையன் நேரடி மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 23ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆளுநர் என்பவர் மேனேஜர் தான். கவர்னரே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்’ என்று […]

Recent News

நான் பேசினாலே PROBLEM தான் – ரஜினி

நான் பேசினாலே PROBLEM…

“நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள்.…

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு ‘தர்மன்’…

நடிகை த்ரிஷா வாழ்த்து

நடிகை த்ரிஷா வாழ்த்து

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்,…

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன்மரியாதை

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்;…

சென்னை :தமிழக பாஜக தலைவர் நயினார்…

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

மத்திய இணை அமைச்சர்…

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை…

தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு – சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்

தள்ளிப் போகிறது பொறியியல்…

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி…

1 2 3 4 5 18