அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

கோவை:
கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கவுண் டம்பாளையம் தொகுதியில் கனிமொழி சந்தோஷ் என்பவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். வேட்பாளராக அறிவிக் கப்பட்டதில் இருந்தே அவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜோதிடரான கனிமொழி, ஜோதிடம் மூலமாக புற்றுநோயை குணப்படத்தலாம் என்று சொல்லியது சர்ச்சயானது.

தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவினர், எம்எல்ஏவாக பதவியேற்று அந்தந்த தொகுதிகளில் சென்று பணியாற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பெரும் பாலான எம்எல்ஏக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று தான் அதி காரிகளிடம் ஆய்வு, ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி, அரசு அலுவலர்களை தன்னுடைய வீட்டி ற்கு அழைத்து ஆலோ சனை நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியின் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது குறித்து கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது. தூய்மை பணிகள் தீவிரப் படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது. நோய் தடுப்பு நடவடிக் கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந் துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப் பட வேண்டும் என அவர் களுக்கு வலியுறுத்தினேன்” என்று கூறினார்.

இதுகுறித்த புகைப் படங்களை சமூக வலைதளில் பதிவிட்டுள்ளார். அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இதுகுறித்து திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “அரசு மேல் அதிகாரிகளை தன் வீட்டுக்கு வர கட்டா யப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரத்தை இந்த சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுத்தது யார்” என்று முதலமைச்சர் மற்றும் கோவை ஆட்சியரை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு தவெகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கனிமொழியின் பதி விலேயே தவெகவினர் எதிர்வினையாற்றி வருகி றார்கள். “மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத் திற்குச் சென்று அதி காரிக ளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதி நிதி, அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியது முறையல்ல. களத்திற்கு சென்று பணியாற்றாமல் வீட்டில் இருந்தபடி அதிகாரிகளை அழைத்து பேசுவது தவறான முன் உதாரணம்”என்று விமர் சித்துள்ளனர்.

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கவுண் டம்பாளையம் தொகுதியில் கனிமொழி சந்தோஷ் என்பவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். வேட்பாளராக அறிவிக் கப்பட்டதில் இருந்தே அவர் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜோதிடரான கனிமொழி, ஜோதிடம் மூலமாக புற்றுநோயை குணப்படத்தலாம் என்று சொல்லியது சர்ச்சயானது. தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவினர், எம்எல்ஏவாக பதவியேற்று அந்தந்த தொகுதிகளில் சென்று பணியாற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Recent News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

1 7 8 9 10 11