இன்றைய தமிழகம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விலை திடீர் உயர்வு.!!

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 42% வரை உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பால் உலகளவில் மெமரி சிப் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது MacBook மற்றும் iPad உள்ளிட்ட தயாரிப்புகளின் விலைகளை 20% முதல் 42% வரை உயர்த்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஆப்பிள் நிறுவன உயரதிகாரிகள், AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில் மெமரி சிப் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத உயர்வையே எங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிகரிக்க காரணம்.

மேலும் இந்த விலை மாற்றங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டன என கூறி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சிப் உள்ளிட்ட உதிரிபாகங்களின் கூடுதல் விலையை ஆப்பிள் நிறுவனமே ஏற்றுக்கொண்டு நுகர்வோரை பாதுகாத்தது. குறைந்தபட்சம் இரண்டு காலாண்டுகளாக ஆப்பிள் தனது தயாரிப்புகளின் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் தொடர்ந்து கூடுதல் செலவினங்கள் தாங்க முடியாத அளவுக்கு சென்றதால், தற்போது விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 42% வரை உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பால் உலகளவில் மெமரி சிப் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது MacBook மற்றும் iPad உள்ளிட்ட தயாரிப்புகளின் விலைகளை 20% முதல் 42% வரை உயர்த்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஆப்பிள் நிறுவன உயரதிகாரிகள், AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில் மெமரி […]

Recent News

தலைமை அலுவலகத்தில் லயோலா மணி  ஆய்வு

தலைமை அலுவலகத்தில் லயோலா…

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்…

தமிழ்நாடு அரசு புதிய முயற்சி

தமிழ்நாடு அரசு புதிய…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு…

மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம்

மேயர் பிரியா தலைமையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையினை…

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன்

முதலமைச்சர் விஜயை சந்தித்து…

நீண்ட காலம் என் நினைவில் நிலைத்திருக்கும்…

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து…

இதயங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்துவது…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது

லஞ்ச புகார்: தவெக…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது…

1 7 8 9 10 11 31