இன்றைய தமிழகம்

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில்எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி,மேயர்ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பேசுகையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக மீதுநம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை நாம் நன்றி மறவாமல் மாவட்டத்தில் யார் மீதும் யாரும் குறை சொல்லாமல் இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக பணியாற்றி வெற்றிக்கான வழிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அனைவரும் இணைந்து செயல்படுவோம். தற்போது உள்ள இந்த ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மாவட்டத்தில் உள்ள பெண்களை யாரும் தரக் குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது. இனி வரும் காலம் நமக்கான காலமாக அமையும் என்றார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் வடக்கு மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் நாம் வெற்றி வாகை சூடியுள்ளோம், தூத்துக்குடி தொகுதியில் தற்போது சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் இனி வரும் காலங்களில் தளபதியரின் வழிகாட்டுத லின் படி வெற்றி பெறு வோம் அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்றி கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளோம் என்றார்.

கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், சிறுபான்மை அணி மாநில துணைச்செயலாளர் எஸ்டிஆர் பொன்சீலன், கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பி ரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீத கண்ணன், ராதா கிருஷ்ணன், ஜெய கண் ணன், இமானுவேல், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், சுரேஷ் கண்ணன், கிருஷ்ணகுமார், பாலகுமார் மற்றும் பெருமாள் கோவில் அறங் காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில்எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி,மேயர்ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பேசுகையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக மீதுநம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை நாம் நன்றி மறவாமல் மாவட்டத்தில் யார் மீதும் யாரும் குறை சொல்லாமல் இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக பணியாற்றி […]

Recent News

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு…

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா…

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

1 2 3 4 5 6 31