இன்றைய தமிழகம்

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 23ந்தேதி 3 நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சியமைக்க முதலில் 5 காங்கிரஸ் கட்சியின் 5 – எம்.எல் .ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர் முய ற்சியின் பலனாக, சி.பி.ஐ., – சி.பி.எம். வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லி ம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. 5 இதில், ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு 5 அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அறிவித்தன.

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்துள்ள நிலையில், த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இது, ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான் மைக்கும் (118) கூடுதல் ஆகும். இதனால், த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகரிடம் உரிமை கோரினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல் அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். எம்.எல்.ஏ.க்கள் கடந்த 11 ந்தேதி பதவியேற்றனர். இதன்பின்னர், 13ந்தேதி சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் பெரும் பான்மையை நிரூபித்தார். இந்த நிலையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியானது. இதற்காக தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேகர் கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு நாளை வர இருக்கிறார்.

த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள், ஒரு மாநிலங்களவை பதவியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதில் ஒருவராக, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரான ராஜேஷ் குமார் இடம்பெறுவார். இதனால், 1967ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது. இதேபோன்று, அ.தி. மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ். பி. வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க வுக்கு ஆதரவு அளித் துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.

17வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய் யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும்.

அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பத விப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும். கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார். அதன்பின்னர், 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 23ந்தேதி 3 நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க முதலில் 5 காங்கிரஸ் கட்சியின் 5 – எம்.எல் .ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர் முய ற்சியின் பலனாக, சி.பி.ஐ., – சி.பி.எம். வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லி ம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் […]

Recent News

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

1 3 4 5 6 7 31