இன்றைய தமிழகம்

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராக கடந்த மே.9 ம் தேதி விஜய் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கான இலாகாகள் ஒதுக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று அமைச்சரவைவ விரிவாக்கம் செய்வும் வகையில் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும் விழா நடைபெற்றது.

முதலில் வந்தே மாத ரம் இசைக்கப்பட்டு பதவி யேற்பு விழா தொடங்கியது. விஜய் முதல்வராக பதவி யேற்றபோதும் கூட முத லில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அமைச்சர்களாக, 1. ஸ்ரீநாத் தூத்துக்குடி எம்எல்ஏ, 2. எஸ்.கமலி அவிநாசி, 3. சி.விஜயலக்ஷ்மி குமார பாளையம், 4. ஆர்.வி.ரஞ்சித் குமார் காஞ்சிபுரம், 5. வினோத் கும்பகோணம், 6. ராஜீவி திருவாடானை, 7. பி.ராஜ்குமார் லூர், 8. வி.காந்திராஜ் கட அரக்கோணம், 9. மதன் ராஜ்.பி ஒட்டப்பிடாரம், 10. ஜெகதீஸ்வரி.கே ராஜபாளையம், 11. ராஜேஷ்குமார்.எஸ் கிள்ளியூர், 12. விஜய் பாலாஜி. எம் ஈரோடு கிழக்கு, 13. லோகேஷ் தமிழ்செல்வன். டி ராசி புரம், 14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ சேலம் தெற்கு, 15. ரமேஷ் ஸ்ரீரங்கம், 16. பி.விஸ்வநாதன் மேலூர், 17. குமார். ஆர் வேளச்சேரி, 18. தென்னரசு.கே ஸ்ரீபெரும் புதூர், 19. சம்பத்குமார்.வி கோவை வடக்கு, 20. முகமது ஃபர்வாஸ்.ஜே அறந்தாங்கி, 21. டி,சரத் குமார் தாம்பரம், 22. மரிய வில்சன் ராதாகிருஷ்ணன் நகர், 23. விக்னேஷ்.கே கிணத்துக்கடவு ஆகியார் பதவியேற்றுக் கொண்டனர்.

இத்துடன் தமிழக அமைச்சரவையில் பலம் 33 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அமைச்சரவை யில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறும் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் ஆதரவை பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள் எச்ச ரித்திருந்த நிலையில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை.

தமிழக அமைச்சரவை யில் காங்கிரஸ் எம்எல்ஏ. க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர் களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக அரசியலில் 59 ஆண்டு களுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரம் பெற்றுள்ளது. இது அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் எம் எல் ஏ ராஜேஷ்குமார் எஸ் பதவி யேற்ற போது முன்னாள் முதல்வர் காமராஜ், முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து கோஷம் எழுப்பினார். அதற்கு ஆளுநர் இது தங்களது உறுதிமொழியின் பகுதி அல்ல என்று உடன டியாக கண்டனம் தெரி வித்தார். தவெக ஆட்சிக்கு வரும் முன்னரே தன்டன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று பிரச்சாரம் செய்தது நினைவு கூரத்தக்கது. மேலும் தமிழக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப் பிடத்தக்கது.


தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழக முதல்வராக கடந்த மே.9 ம் தேதி விஜய் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கான இலாகாகள் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில் […]

Recent News

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

கரப்பான் பூச்சி ஜனதா…

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்…

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின்

உலக கோப்பையை வென்ற…

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி…

பழனி கோயில் நில…

ஏன் இன்னும் சார் பதிவாளரை கைது…

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘தமிழ்நாடு…

1 … 4 5 6 7 8 … 31