தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026 (4) பிரதமரின் பொருளாதார தந்திரம்!

நமதுநாடு பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நேரமும் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரச்னை நீடிப்பதும், கச்சா எண்ணெய் விலை உயர்வதும், பங்குச் சந்தை ஆட்டம் காணும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் சிறு முதலீட்டாளர்களின் கவலையை அதிகப்படுத்தி வருகின்றன. உலக அளவில் இந்திய சந்தையின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிப்பதாகவே உள்ளது. மேலும் அமெரிகா ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியாவை ஒரு வழி செய்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை குறைவதை நாம் சந்தோஷமாக பார்ப்பதா? அல்லது சோகத்துடன் உற்று நோக்குவதா என்பதுதான் இப்போதைய கேள்வி. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது 98ஆக இருந்தது. ஆனால் இன்றோ இது 94.98ஆக குறைந்து நிற்கிறது. இது பொருளாதாரத்தில் இந்தியாவின் சரிவை காட்டுகிறது. டாலருக்கு நிகரான பணமதிப்பு விழும்போது இறக்குமதிப் பொருள்களுக்கு நாம் தரும் விலை அதிகரிக்கிறது. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், மருந்துப் பொருள்கள் ஆகிய தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை ஏறுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் 10,000 ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு இன்று 11,600 ரூபாய் தரவேண்டியுள்ளது. அப்படி பார்த்தால் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நமது பாரத பிரதமர் சரியான ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். அவரது இந்த செயல் அனைவரையும் வெகுவாக பாராட்ட வைத்திருக்கிறது. அதாவது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்கவும், ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த அழைப் புக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத் துள்ளது. மேலும், தங்கச் சந்தையில் ஒரு புதிய புரட்சி தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்க இறக்குமதியைக் குறைக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பெரிய நகை வியாபாரிகள் இப்போது ஆத ரிக்கின்றனர். மணி கண்ட்ரோல் அறிக்கையின்படி, மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிரு ந்து 15 சதவீதமாக உயர் த்தியுள்ளது. இது முதலீட் டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயரும்போது தனது பாதுகாப்பு வாகனங்களை குறைத்த பிரதமர், கவர்னர்களின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கைகளையும் குறைக்க கூறினார். மேலும் வாகன பயன்பாட்டை குறைக்கும்படி பணிந்தார். இப்போது தங்கத்தின் மீதான முதலீடை ஒரு ஆண்டுக்கு நிறுத்த சொல்லியிருக்கிறார். இது நமது நாட்டு பொருளாதாரத்தை சரிவில் இருந்து காப்பாற்றினால் நன்மைதான்.

நமதுநாடு பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நேரமும் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரச்னை நீடிப்பதும், கச்சா எண்ணெய் விலை உயர்வதும், பங்குச் சந்தை ஆட்டம் காணும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் சிறு முதலீட்டாளர்களின் கவலையை அதிகப்படுத்தி வருகின்றன. உலக அளவில் இந்திய சந்தையின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிப்பதாகவே உள்ளது. மேலும் அமெரிகா ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்தியாவை ஒரு வழி […]

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 12 13 14 15