தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர்:
தென்மேற்குப் பருவ மழை காலங்களில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தரிவித்த தாவது:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை வருகிற ஜூன்6 மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் என வானிலை அறிக்கை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழை காலத்தில் மக்களுக்கும், கால் நடைகளுக்கும், உடமைகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களின் போது, பொதுகட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அறிக்கை தயார் செய்திட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங் களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள் ளிக் கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

பேரிடர் காலத்தின்போது அமைக்கப்படவுள்ள நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன், முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகள் உறுதித்தன்மையை ஆராய்ந்து, பலவீனமாக இருப்பின் அவற்றை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத் தியாவசிய உணவுப் பொருட்களின் இருமடங்கு தேவைகளை மூன்று மாதத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். பண்டங்கள் நகர்வின் போது அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மழைநீரால் பாதிக்காத வகையில் தார்பாலின் போட்டு மூடி பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய், காலி சாக்குப்பைகள் ஆகியவற்றை போது மான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங் களில் போதுமான அளவில் மருந்துகளை இருப்பில் வைத்திருக்கவும், அத்தியா வசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.பேரிடர் தொடர் பான அனைத்து தகவல் கள் மற்றும் புகார்கள் TNSMART APP தெரிவிக்கப்படும் என்பதால் அனைத்து அலுவலர்களும் மேற்படி செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும் TNSMART APP மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டு உடனுக்குடன் பதில் அனுப்பப்படவேண்டும். தங்கள் பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்திடும் வண்ணம் தாமினி (DO-MINI) APP உருவாக்கப்பட்டுள்ளது. இந்த APP (செயலியை) அனைவரும் தங்களது அலைபேசியில் பதிவிறக் கம் செய்து கொள்ள வேண்டும்.மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங் கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிலும், 18004254556 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்ற விபரத்தை பொது மக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரெ.சக்திவேல், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் கலைவாணி, அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு பெரம்பலூர்:தென்மேற்குப் பருவ மழை காலங்களில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தரிவித்த தாவது:தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை வருகிற ஜூன்6 மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் என வானிலை அறிக்கை மூலம் தெரிவிக்கபட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழை காலத்தில் மக்களுக்கும், கால் நடைகளுக்கும், உடமைகளுக்கும் […]

Recent News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

1 7 8 9 10 11