தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

  1. Home
  2. »
  3. Education News
  4. »
  5. 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா ஆலோசனை மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட் டம், வண்ணார் பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார், முன்னி லையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் பல் வேறு திட்டப்பணிகள் தொடர்பாக இன்று (30.05.2026) ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தர வின்பேரில் தொழில் துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தமிழகம் சிறந்து விளங்க தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் தொழில் சூழலை வலுப்படுத் துவ தற்கும், அரசு மானியங்கள் வழங்குவதை விரைவுப டுத்துவதற்கும் தேவை யான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகள் தாமதமின்றி, தகுதியான பயனாளிகளுக்கு விரை வாகச் சென்றடைவதை உறுதி செய்யப்படும். உற்பத்தி (Manufactur-ing) மற்றும் சேவைத் (Ser-vice) துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங் களை நீக்குவது குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு மிக முக்கியத் தேவையான நிதி ஆதாரங்களை எளிதாக கிடைப்பதற்கு மாவட்டத்தில் உள்ள வணிக வங்கிகள் (Com-mercial Banks) மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துடன் (TIIC) மாவட்டத் தொழில் மையம் சுமுகமான உறவை ஏற்படுத்தி தொழில் முனைவோர்களுக்கு தேவையான கடன் கிடைப் பதற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னோடி யாக மாநிலமாக தொழில் துறையில் திகழ தேவை யான ஆக்கப் பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரி வித்தார்கள். கூட்டத்தில் திருநெல் வேலி சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எஸ்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, திரு நெல்வேலி வருவாய் கோட் டாட்சியர் பிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் நாகராஜன், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் கிருஷ்ணகுமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா ஆலோசனை மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட் டம், வண்ணார் பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார், முன்னி லையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் பல் வேறு திட்டப்பணிகள் தொடர்பாக இன்று (30.05.2026) […]

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 12 13 14 15