இன்றைய தமிழகம்

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததார். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை வழியாக அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு அறக்கட்டளை மற்றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்கும் வகையில் “நலம் TN” என்ற புதிய இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், 139 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குதற்காக, உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், பெரிய தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மற்றும் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெற்று வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய முறையில் செயல்படுத்தும் பொருட்டே “நலம் TN” இணையதளம் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டு, அதற்கான இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையான முறையில் நேரடியாகவும், பாதுகாப்பாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் வழங்க முடியும். புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தல்

தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்திடும் வகையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின்கீழ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப் பிரிவுக் கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்கு மேல் 17 கோடி ரூபாய் செலவில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, 180 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது மருத்துவ வார்டுகள், செவிலியர் நிலையங்கள், மருத்துவர் அறைகள், பரிசோதனை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள நான்கு தளங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இதேபோல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 57 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடம்; புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததார். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் […]

Recent News

ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்;…

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எத்தனை…

மோடி அமைத்த உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை-அமைச்சர் வன்னி அரசு

மோடி அமைத்த உயர்நிலைக்…

2024இல் நீட் மோசடியின்போது முன்னாள் இஸ்ரோ…

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா ஹெக்டே

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா…

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை…

நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

நீட் தேர்வு பற்றி…

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நிறுத்துவோம்…

தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது-மு.க.ஸ்டாலின்

தொடரும் காவல் மரணங்கள்.…

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…

தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்-நடிகை ஜோதிகா

தர்மேந்திர பிரதான், பதவி…

“தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா…

1 2 3 31