இன்றைய தமிழகம்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் – முதல்வர் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.

சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு வாசகத்தை முதல்வர் விஜய் எழுதினர். தொடர்ந்து போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்துக் கொண்டனர். அதனை முதல்வர் விஜய் வாசித்தார்.

“போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்; போதைப் பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஓட்டத்தை கொடியசைத்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல் துறையினர், விளையாட்டு வீரர்கள் என இந்த ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு, ‘போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், முதல்வர் விஜய், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை 14 காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார். சென்னை – காமராஜர் சாலையில் இந்த ஓட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அரசின் உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், தடகள ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர். […]

Recent News

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 9 10 11 12 13 18