மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. அவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன.


1. ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY)

துவக்கம்: ஆகஸ்ட் 2007

நோக்கம்

11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வேளாண்மை மற்றும் அதன் துணைத் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஆண்டுக்கு 4% வேளாண் வளர்ச்சியை அடைவது.

குறிக்கோள்கள்

  • மாநிலங்களுக்கு வேளாண் முதலீட்டை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்குதல்
  • திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குதல்
  • வேளாண் துறையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்

திட்டத்தின் தன்மை

  • 100% மத்திய அரசு நிதியுதவி திட்டம்

துணைத் திட்டங்கள்

  • பசுமைப் புரட்சி (BGREI) – இந்தியாவின் கிழக்கு பகுதிகளில்
  • கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டம்
  • தேசிய எண்ணெய் வித்துத் திட்டம்
  • பயிர் பன்முகப்படுத்தல் திட்டம்
  • கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு (கோமாரி நோய்)
  • தேனீ வளர்ப்பு திட்டம்
  • நெல் தரிசு நில பயன்பாட்டு திட்டம்

2. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM)

துவக்கம்: அக்டோபர் 2017

நோக்கம்

நெல், கோதுமை, பருப்பு, தானியங்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தல்.

இலக்குகள்

  • நெல் உற்பத்தி: 10 மில்லியன் டன் உயர்வு
  • கோதுமை உற்பத்தி: 8 மில்லியன் டன் உயர்வு
  • பருப்பு உற்பத்தி: 2 மில்லியன் டன் உயர்வு

திட்டத்தின் தன்மை

  • மத்திய அரசு நிதியுதவி திட்டம்
  • நெல் மற்றும் பிற தானியங்களுக்கு மத்திய–மாநில நிதி பங்கு 50:50
  • பணப்பயிர்களுக்கு 100% மத்திய அரசு நிதியுதவி

முக்கிய கூறுகள்

  • NFSM – நெல்
  • NFSM – கோதுமை
  • NFSM – பருப்பு வகைகள்
  • NFSM – தானியங்கள்
  • NFSM – வர்த்தகப் பயிர்கள்

3. தமிழக அரசு – தொழிலாளர் நலத் திட்டங்கள் (சுருக்கம்)

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்

1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பல்வேறு அமைப்புசாரா தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

முக்கிய தொழில் பிரிவுகள்

  • சுமை ஏற்றுதல் / இறக்குதல் தொழிலாளர்கள்
  • கிடங்கு மற்றும் டிப்போ தொழிலாளர்கள்
  • ரயில்வே யார்டு தொழிலாளர்கள்
  • பொது போக்குவரத்து வாகனங்களில் ஏற்றுதல்/இறக்குதல் பணிகள்
  • மீன்பிடி தொழில் சார்ந்த பணிகள்
  • கூரைப்பணி, தையல் மற்றும் துணி சார்ந்த பணிகள்
  • தேங்காய் (Coir) தொழில் சார்ந்த பணிகள்

பிற சட்டங்கள்

  • 1948 தொழிலாளர் சட்டம் தொடர்பான பணிகள்
  • 1950 தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைச் சட்டம் சார்ந்த தொழில்கள்

தொடரும்…

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. அவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன. 1. ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY) துவக்கம்: ஆகஸ்ட் 2007 நோக்கம் 11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வேளாண்மை மற்றும் அதன் துணைத் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஆண்டுக்கு 4% வேளாண் வளர்ச்சியை அடைவது. குறிக்கோள்கள் திட்டத்தின் தன்மை துணைத் திட்டங்கள் 2. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM) துவக்கம்: அக்டோபர் […]

Recent News

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய…

தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2…

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

முழு அமைச்சரவை அமைக்க…

புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள்…

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில்…

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்…

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

1 8 9 10 11 12 15