மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள். குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக் கொள் ளப்படுகின்றன.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்படும் வழக்குக ளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும் வழக்காடிகளின் நேரமும், செலவும் மிச்சமாகும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சீர்காழி சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மாண்புமிகு டாக்டர். எல்.எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் […]

Recent News

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில்…

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய…

தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2…

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

முழு அமைச்சரவை அமைக்க…

புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள்…

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில்…

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்…

1 4 5 6 7 8 11