இன்றைய தமிழகம்

வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள் – உதவிக்கரம் நீட்டியது இந்தியா

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக…

வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள் – உதவிக்கரம் நீட்டியது இந்தியா

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது.

இதன்​காரண​மாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டுள்​ளன. தலைநகர் கராகஸில் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாது​காப்பு படைப் பிரிவு​களும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு உள்​ளன. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், தென்​அமெரிக்க நாடு​களின் ராணுவ வீரர்​களும் மீட்​புப் பணி​யில் இணைந்​துள்​ளனர்.

இது​வரை 589 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்டுள்​ளன. 4,300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறுகின்​றனர். பூகம்​பம் நேரிட்ட பகு​தி​களில் காணா​மல் போனவர்​கள் குறித்த விவரங்​களை பதிவு செய்ய வெனிசுலா அரசு சார்​பில் சிறப்பு இணை​யதளம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த இணை​யத்​தில் 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்லை என்று பதி​விடப்​பட்டு உள்​ளது. அவர்​கள் கட்​டிட இடி​பாடு​களில் சிக்​கி​யிருக்​கலாம் என்று மீட்​புப் படை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

வெனிசுலாவின் மொத்த மக்கள் தொகை 2.86 கோடி. இதில் சுமார் 70 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கராகஸில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்​தி​யா​வின்ஆபரேஷன் அமிஸ்​டாட்’ இந்நிலையில், பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவுவதற்​காக இந்​தி​யா​ சார்​பில் ‘ஆபரேஷன் அமிஸ்​டாட்’ தொடங்​கப்​பட்டு உள்​ளது. (‘அமிஸ்டாட்’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘நட்பு’). இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘இந்​திய விமானப் படை​யின் சி17 ரக சரக்கு விமானங்​கள் மூலம் மருந்​துகள், மருத்​துவ உபகரணங்​கள் உட்பட 35 டன் நிவாரணப் பொருட்​கள் வெனிசுலா​வுக்கு அனுப்​பப்​பட்டுள்​ளன’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 41 மருத்துவப் பணியாளர்களும் வெனிசுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​க்கின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் சார்​பில் வெனிசுலா​வில் இலவச​மாக இணைய இணைப்பு வழங்​கப்​பட்டுள்​ளது. இதன்​மூலம் அந்த நாட்​டின் தகவல் தொடர்பு சீரடைந்​திருக்​கிறது. ஆனால் மின் விநி​யோகம், குடிநீர் விநி​யோகம், சமையல் காஸ் விநி​யோகம் முழு​மை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது.

பூகம்ப பாதிப்​பு​கள் குறித்து மீட்​புப் படை வீரர்​கள் கூறிய​தாவது: அடுத்​தடுத்து ஏற்​பட்ட 2 பூகம்​பங்​களால் லா குய்​ரா​வின் மலைப் பகு​தி​களில் கட்​டப்​பட்​டிருந்த அனைத்து அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களும் நொறுங்கி சரிந்​துள்​ளன. தலைநகர் கராகஸிலும் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் இடிந்​துள்​ளன.

வெனிசுலா பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்​கும் மேற்பட்ட வீரர்​கள் மீட்​புப் பணி​களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட 25 நாடு​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு வீரர்​களும் மீட்​புப் பணி​களில் உதவி வரு​கின்​றனர். இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளோரை மோப்ப நாய்​களின் உதவி​யுடன் அதிதீ​விர​மாக தேடி வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ ​கூறினர்​.

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது. இதன்​காரண​மாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டுள்​ளன. தலைநகர் கராகஸில் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாது​காப்பு படைப் பிரிவு​களும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு உள்​ளன. […]

Recent News

நான் அரசியல விட்டு…

 நான் அரசியலை விட்டு போறேன்… நீங்க…

வெனிசுலாவுக்கு 2 விமானங்களில்…

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின்…

இன்று தங்கம் விலை…

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,…

அணுசக்தி, ஏஐ துறையில்…

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில்…

“டெல்டா மாவட்டங்களில் வேளாண்…

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு…

அரசு நிகழ்ச்சி பேனரில்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

1 2 3 18