இன்றைய தமிழகம்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. 34C என்றபத்திரப்பதிவுசட்டத்திருத்தத்தைரத்துசெய்துஐகோர்ட்கிளைஉத்தரவு

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ள Revised Annual Planner 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable), சிறைக்காவலர் உள்ளிட்ட எந்தவொரு சீருடைப் பணியாளர் தேர்வும் நடத்தப்படாமல், அனைத்துத் தேர்வுகளும் 2027ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, காவல்துறையில் பணியாற்றும் இலக்குடன் பல ஆண்டுகளாகத் தீவிரமாகித் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களுக்குக் குறைந்தது ஓராண்டுக்காவது தளர்வு வழங்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

TNUSRB விதிகளின்படி, காவலர் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது தகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த ஏராளமான தேர்வர்கள், தேர்வு 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், 2027ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது வரம்பைத் தாண்டி தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர்கள், தேர்வை எழுதும் வாய்ப்பையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு முதல் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீண்டகால உழைப்பு வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு, 2026ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அடுத்த ஆண்டில் போட்டி மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெறுவதிலும் கூடுதல் தாமதம் ஏற்படும்.
எனவே, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த அனைவருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் TNUSRB தேர்வுகளுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும். தேவையெனில் இரண்டு ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்குவதையும் பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 2026ஆம் ஆண்டிலேயே இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ள Revised Annual Planner 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable), சிறைக்காவலர் உள்ளிட்ட எந்தவொரு சீருடைப் பணியாளர் தேர்வும் நடத்தப்படாமல், அனைத்துத் தேர்வுகளும் 2027ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, காவல்துறையில் பணியாற்றும் இலக்குடன் பல ஆண்டுகளாகத் தீவிரமாகித் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, […]

Recent News

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

1 19 20 21 22 23 31