இன்றைய தமிழகம்

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருக்கின்றனர். எனவே இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக தவெக 65 % வாக்குகளைப் பெறும்.

Tired of Ads? Subscribe Now

முதலமைச்சர் விஜய் அவ்வளவாகப் பேசவில்லை என்றாலும் செயல்படும் முதலமைச்சராக இருக்கின்றார். அதுதான் மிக முக்கியமான விஷயம்.

என்னுடைய திருச்சி தொகுதிக்கு உட்பட்ட மெட்ரோ ரயில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தேன்.

அடுத்த நாளே அதிகாரிகள் என்னைக் கூப்பிடுகின்றனர். ஒரு செயல்படும் அரசைப் பார்க்கிறேன். ஒரு செயல்படும் அமைச்சரவையைப் பார்க்கிறேன்.

ஒரு செயல்படும் முதல்வரைப் பார்க்கிறேன். செயல்படும் முதல்வராக இருக்கும் விஜய்க்கு நன்றி” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை […]

Recent News

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 16 17 18