இன்றைய தமிழகம்

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறை யாக களம் கண்ட த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்அமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார். முதல் அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16ந் தேதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விஜய் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சீரிய செயல்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். அதன்படி படிப்படியாக மூடப்பட்டு வருகறிது. தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், எந்த அரசு துறையாக இருந்தாலும்
உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம். புகார்
அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க அழைக் 5 1800 425 1555 (24×7 கட்டணமில்லா எண்)
தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் அமைச்சர் விஜய் தானே ஒரு அரசு ஊழியரைப் போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுவது அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. “மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன்” என்று உறுதியளித்துள்ள அவர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க இலக்கு வைத்துள்ளார்.

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறை யாக களம் கண்ட த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ். கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்அமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார். முதல் அமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16ந் தேதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். விஜய் பொறுப்பேற்றது […]

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

1 21 22 23 24 25 31