இன்றைய தமிழகம்

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதல்வர் விஜய் வசம் உள்ளது. மக்களுக்கு நேரடியாக சேவையாற்றக்கூடிய முக்கியப் பொறுப்பிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் கீழ்தான் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நக ராட்சிகள் மற்றும் பேரூராட் சிகள் உள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் உட்பட பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
வழக்கமாக திமுக அல்லது அதிமுக மக் கள் பிரதிநிதிகள் இருக்கும் போது தவெக என்கிற ஒரு கட்சி புதிதாக உள்ளே நுழைந்துள்ளது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் தவெகவை மதிப்பதில்லை. எதிராகவே செயல்படுகின்றனர்.
கோவை மாநகராட்சி யில் மேயர் அறையில் இவ்வாறு அனுப்பி வைக் கப்பட்ட முதல்வர் விஜய் படத்தை வைப்பதற்கு கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மறுத் துள்ளார். இதுகுறித்து செய் தியாளர்களிடம் பேசியுள்ள அவர், “எங்களுடைய பதவிக்காலம் வரும் ஜனவரி வரையிலும் இருக்கிறது. அதுவரையி லும் எனது அறையில் எங் களுடைய தலைவர்கள் படங்கள் மட்டுமே வைக்க அனுமதிப்பேன்.முதல்வர் விஜய் படத்தை வைக்க மாட்டேன்” என்று கூறி யிருந்தார்.
மேயர் அறையில் இப்போதும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று சென்னை மாநகராட்சியிலும் அரசுக் கும், மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடை யிலான சூழல் விவாதப் பொருளாகியுள்ளது
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று பல நாட்கள் கழிந்தும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவரைப் பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேயரின் நடவடிக்கையை சென்னை யிலுள்ள ‘வாய்ஸ் ஆஃப் பீப்பிள்’ அமைப்பு கண்டித் துள்ளது.
எக்ஸ் தளத்தில் அந்த அமைப்பு வெளியிட் டுள்ள பதிவில், மாநக ராட்சி மன்றத்திற்கு இன் னும் சுமார் ஓராண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கு மாநில அரசு, மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான ஒருங் கிணைப்பு அவசியம்.” என்று தெரிவித்துள்ளது.
பெருமழைக் காலங் களில் அரசும், மாநகராட்சி மன்றமும் இணைந்து செயல்படாவிட்டால் ஏற்ப டப்போகும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலை, மழைநீர் வடிகால் பராமரிப்பு, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, தூய் மைப்பணி, பொது சுகா தாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள மாநகராட்சி நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் மாநில அரசுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டால்தான் பேரிடர்களை எதிர்கொள்ள முடியுமென்றும் பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதல்வர் விஜய் வசம் உள்ளது. மக்களுக்கு நேரடியாக சேவையாற்றக்கூடிய முக்கியப் பொறுப்பிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் கீழ்தான் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நக ராட்சிகள் மற்றும் பேரூராட் சிகள் உள்ளன.கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் உட்பட பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.வழக்கமாக திமுக அல்லது […]

Recent News

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

1 16 17 18 19