கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

ஐஜி ரம்யா பாரதி விளக்கம்

சென்னை:
கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கோவை ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 21 ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போன தாக தகவல் கிடைக்கப் பெற்றது.
தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் உடன டியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, புகார் பெற்று அதே இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது
காவல் கண்காணிப் பாளர் இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக் கப்பட்டு, காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட் டத்தை சேர்ந்த கார்த்தி (33), சிறுமியின் குடும்பத்துக்குப் பழக்கமான அண்டை வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. அதோடு, சிறுமியை அழைத்துச் சென்றதும் உறுதி செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கி இருந்த குற்றவாளியை காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். கார்த்தி அப்போது தப்பி க்க முயன்றபோது, மேல்மாடியில் இருந்து குதித்ததில், அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய் யப்பட்டார்.
விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம் பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மேலும், நடைபெற்ற விசாரணையில், பாரதிபுரம், பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் (30) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந் தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு சிறுமி மீதான பாலியல் வன் கொடுமை தொடர் புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
24 நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கோவை ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 21 ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணி அளவில், கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போன தாக தகவல் […]

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 3 4 5 6 7 11