இன்றைய தமிழகம்

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

நாகை:
நாகை அருகே பழமை வாய்ந்த சிகார் புனித பதுவை அந் தோணியார் ஆலய திருத் தேர் பவனி நடைபெற்றது. வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மன முருகி வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிகாரில் தஞ்சா வூர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பழமை வாய் ந்த புனித பதுவை அந் தோணியார் ஆலயம் இவ் அமைந்துள்ளது. வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி கோலாகலமாக நடை பெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப் பரங்களில் பதுவை அந் தோணியார், ஆரோக்கிய மாதா, சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக பங்கு தந்தை ஜெரால்டு தலைமையில் திருவிழா பாடல், கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேரினை புனிதம் செய்து துவங்கி வைத்தார்.

ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங் கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது வான வேடிக்கைகளோடு முக் கிய வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீடுக ளிலும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்றும் அந்தோணியார்க்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி மனமுருகி பிரார்த் தனை செய்தனர். தேர்பவனியை முன்னிட்டு விடிய விடிய அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சி யினை சிகார் கிருஷ்துவ இறை மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார் புனித பதுவை அந் தோணியார் ஆலய திருத் தேர் பவனி நடைபெற்றது. வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மன முருகி வழிபாடு செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் சிகாரில் தஞ்சா வூர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பழமை வாய் ந்த புனித பதுவை அந் தோணியார் ஆலயம் இவ் அமைந்துள்ளது. வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி […]

Recent News

நீர் எழில் பள்ளி திட்டம் -அமைச்சர் தொடங்கி வைத்தார்

நீர் எழில் பள்ளி…

சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்…

CJP போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

CJP போராட்டத்திற்கு திருமாவளவன்…

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில்…

திருவண்ணாமலையில் நியாய விலை கடையில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் நியாய விலை…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்,…

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக…

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா…

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

நீட் ஒழிப்பு தான்…

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும்…

ராகுல் கைது -தவெக கண்டனம்

ராகுல் கைது -தவெக…

அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை…

1 2 3 4 31