இன்றைய தமிழகம்

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை: இறுதிக்கட்டத்தில்வர்த்தகஒப்பந்தம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை: இறுதிக்கட்டத்தில்வர்த்தகஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.

இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​பட்டு வந்​தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா தடை விதித்​திருந்​தது. இதை ஐரோப்​பிய நாடு​களும் பின்​பற்றி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதைத் தவிர்த்து வளை​குடா நாடு​களிடம் கச்சா எண்​ணெய் வாங்​கத் தொடங்​கின. ரஷ்​யா​விடம் இருந்து சீனா மற்​றும் இந்​தியா போன்ற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால்​தான், உக்ரைன் போரை தொடர்ந்து நடத்​து​வதற்​கான நிதி ரஷ்​யா​வுக்கு கிடைப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.

இதற்கு அபராத​மாக இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா விதித்த இறக்​குமதி வரி 50 சதவீத​மாக உயர்ந்​தது. இது அமெரிக்கா​வுக்​கான இந்​திய ஏற்​றும​தி​யைக் கடுமை​யாக பாதித்​தது. இதன் காரண​மாக இந்​தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது.

இதையடுத்து ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்குமதியை இந்​தியா குறைக்​கத் தொடங்​கியது. அதன்​பின் இந்​தியா – அமெரிக்கா வர்த்​தகம் தொடர்​பான பேச்சுவார்த்தைகள் மீண்​டும் தொடங்​கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்​கா​வில் இருந்து 500 பில்​லியன் டாலர் அளவுக்கு இறக்​குமதி செய்​ய​வும், முதலீடு செய்​ய​வும் இந்​தியா உறு​தி​யளித்​துள்​ளது. இதன் காரண​மாக, இந்​திய ஏற்​றும​தி​கள் மீது விதிக்​கப்​பட்ட வரி 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக் கொண்​டது.

பிரான்​ஸில் நடை​பெற்ற ஜி7 கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்​குப் பின் நேரில் சந்​தித்து பேசினர். அப்​போது இந்​தியா – அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.

இந்​தப் பேச்​சு​வார்த்​தைகளின் முன்​னேற்​றத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்​றும் அவரது குழு​வினர் டெல்லி வந்​துள்​ளனர். அவர்களுடன் மத்​திய வர்த்​தகத் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான மத்​திய அரசு குழு​வினர் நேற்​று​முன்​தினம் பேச்சு​வார்த்​தையைத் தொடங்​கினர். இருதரப்பு பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்​றுடன் முடிந்​தது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அமைச்​சர் பியூஷ் கோயல் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​தியா – அமெரிக்கா இடையி​லான வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தைகளின் நிலை குறித்து அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்​றும் அவரது குழு​வினருடன் விவா​தித்​தோம். பொருளா​தார உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகளை நாங்​கள் ஆராய்ந்​தோம். இரு நாடு​கள் இடையே​யான பொருளா​தா​ரக் கூட்​டாண்​மையை மேம்​படுத்​து​வதற்​கான வழிகளை​யும் நாங்​கள் ஆராய்ந்​தோம். அமெரிக்க தூதர் கிரீரின் தலை​மைத்​து​வத்​தை​யும், நமது பேச்​சு​வார்த்​தைகளை ஆக்கப்பூர்வ​மான மற்​றும் தொலைநோக்கு சிந்​தனை​யுடன் முன்னோக்கி கொண்டு செல்​வ​தில் இரு குழுக்​களும் தொடர்ந்து மேற்​கொண்டு வரும் முயற்​சிகளை​யும் நான் பாராட்​டு​கிறேன். இவ்​வாறு பியூஷ் கோயல் கூறி​னார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார். இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​பட்டு வந்​தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா தடை விதித்​திருந்​தது. இதை ஐரோப்​பிய நாடு​களும் பின்​பற்றி ரஷ்​யா​விடம் இருந்து […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 13 14 15 16 17