இன்றைய தமிழகம்

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

சென்னை:
தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் நடை பெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச் சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட உள்ளது. சட்டசபை தேர் தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த 5 எம்எல்ஏக்களில் இருவரை செய்வது குறித்து அமைச்சர்களாக தேர்வு தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத் பட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் நடை பெற்ற 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச் சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் […]

Recent News

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா…

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

1 … 3 4 5 6 7 … 31