நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி யில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல் அமைச்சர் விஜய், வரும் திங்கள்கிழமை அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக் – கின்றன. சென்னையில் இருந்து தனி விமானத்தில் – திருச்சி கிழக்கு தொகுதி செல்லும் விஜய், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகு தியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், விஜய் அங்கு செல் வது முக்கியத்துவம் பெற் றுள்ளது. அண்மையில் அதி முக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரை வில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகு திகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 6 7 8 9 10 15