51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி:
ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 18 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 19வது வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வா யிலாக பங்கேற்ற பிரத மர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் 51,000 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரை யாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு மிக முக்கியமான நாள். 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நிய மன ஆணைகளைப் பெற்றுள்ளனர்.
பணி நியமனம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காளிகளாக இணைந்துள்ளனர். ரயில்வே, வங்கித்துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் இவர்கள் அனைவரும் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.
வரும் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந் தியாவை உருவாக்கும் லட்சியத்தை நிறை வேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற உள்ளீர்கள். இந்த சாதனைக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பய ணத்தை விரைவு படுத்துவதில் இந்திய இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இளைஞர் சக்திக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கொண்டுள்ள உறுதியை வேலைவாய்ப்பு முகாம் பிரதிபலிக்கிறது. இந் தியாவின் இளைஞர்கள் குறித்தும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் உலகம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண் டிருக்கிறது” என தெரி வித்தார்.
நாடு முழுவ தும் 47 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத் தப்பட்டன.
இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம் கள் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், நடைபெற்ற 19வது வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்த எண் ணிக்கை 12.51 லட்சமாக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 18 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 19வது வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வா யிலாக பங்கேற்ற பிரத மர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் 51,000 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன […]

Recent News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 2 3 4 11