இன்றைய தமிழகம்

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. 34C என்றபத்திரப்பதிவுசட்டத்திருத்தத்தைரத்துசெய்துஐகோர்ட்கிளைஉத்தரவு

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

பூச்சிக்கடிவலி

எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.

உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வயிற்றுப்புண்

பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குறையும்.

வயிற்றுப்போக்கு

கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து மைபோல் அரைத்து உட்கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வேனல் கட்டி

வேனல் கட்டியால் வலி அதிகமாக இருந்தால், சிறிதளவு சுண்ணாம்புடன் தேன் அல்லது வெல்லம் கலந்து கட்டியின் மீது தடவி, அதன் மேல் ஒரு வெற்றிலையை ஒட்டி வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்க்குரு குறையலாம்.

உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி குறையும்.

நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சுருக்கு ஏற்படலாம்.

தீர்வு:

  • தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு கைப்பிடி பார்லி அரிசியை 8 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் குடிக்கலாம்.
  • இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க உதவும்.

எரிச்சல் கொப்பளம்

நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்து பூசினால் எரிச்சல் குறைந்து கொப்பளம் ஏற்படாமல் இருக்கலாம்.

பித்த நோய்கள்

கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால்:

  • கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி குறைய உதவும்.
  • உடலுக்கு வலு தரும்.
  • பித்தக் கோளாறுகள் குறைய உதவும்.

கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் கபக்கட்டு குறையலாம்.

நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்பட்ட புண்ணுக்கு, வில்வ மரக் கட்டையுடன் சந்தனம் சேர்த்து அரைத்து தடவி வந்தால் புண் ஆற உதவும்.

குறிப்பு: இவை பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு வைத்திய முறைகள். கடுமையான அல்லது நீடித்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை அளவு எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். பூச்சிக்கடிவலி எறும்பு உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கலாம். உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவர்கள் உடல் இறுகி மெலிய கொள்ளுப் பயறு (Horse Gram) உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றுப்புண் பீட்ரூட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேன் கலந்து அருந்தி […]

Recent News

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

1 21 22 23 24 25 31