இன்றைய தமிழகம்

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

சென்னை:
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவ தாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் 3 பக்க கடிதம் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்ற விதிகளின்படி தற்போது அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

புகார் தொடர்புடைய தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பென் டிரைவை இணைத்து, தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அம லாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறையா கப் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி ஆளும் கட்சி மற்றும் அமைச் சரவையில் உறுப்பினராக இருந்ததால், முந்தைய திமுக அரசு அனுமதி வழங்குவதில் தாமதம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. நீதிமன்றம் முறையாக விசாரணையைத் தொடங்க ஏதுவாக, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு தவெக தலைமையிலான மாநில அரசை அமலாக்கத்துறை தற்போது வலியுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தவெக அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவ ரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனு மதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்க வில்லை. இந்த நிலையில், போக்கு வரத்துத்துறையில் வேலை […]

Recent News

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

1 3 4 5 6 7 31